×

எண்ணிக்கை தாமதம் ஏன்? தேர்தல் ஆணையம் விளக்கம்

வாக்கு எண்ணிக்கை தாமதம் தொடர்பாக, பீகார் மாநில துணைத் தலைமை தேர்தல் அதிகாரி சந்திரபூஷன் குமார் நேற்று முற்பகல் அளித்த பேட்டி வருமாறு:
* கொரோனா தொற்று பரவல் காரணமாக, சமூக இடைவெளி பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 1,500 வாக்காளர்களுக்கு பதிலாக 1,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
* இதற்காக, கடந்த தேர்தலில் 65,000 ஆக இருந்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1.06 லட்சமாக அதிகரிக்கப்பட்டது.
* இதற்கேற்ப மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கையும் 63 சதவீதம் அதிகரிக்கப்பட்டது.
* வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை கடந்த முறை இருந்த 38ல் இருந்து 55 ஆக அதிகரிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கைக்கு வழக்கமாக போடப்படும் 14 மேஜைகளுக்கு பதிலாக, தற்போது 7 மேஜைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.  
* தொகுதியை பொருத்து, 19 முதல் 51 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. சராசரியாக 35 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
* மொத்தமுள்ள 7.3 கோடி வாக்காளர்களில் 4.16 கோடி பேர், அதாவது 57.09 சதவீதத்தினர் வாக்களித்துள்ளனர்.
* பிற்பகல் 1.30 வரை ஒரு கோடி வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக நள்ளிரவு வரை நீடிக்கும்.
* இதனால், முடிவுகள் அறிவிப்பதில் கால தாமதமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Why the number delay? Election Commission Description
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்