டிப்ளமோ சிவில் இன்ஜினியர்களுக்கு ஜாக்பாட் வரை தொழில் அலுவலர் நியமனத்தில் சட்ட திருத்தம்: நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: இளநிலை வரை தொழில் அலுவலர் நியமனத்தில் சட்ட திருத்தம் செய்து நெடுஞ்சாலைத்துறை செயலாளர் கார்த்திக் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவு வருமாறு: இளநிலை வரை தொழில் அலுவலர் பணியிடங்களுக்கு டிப்ளோமோ சிவில் படித்தவர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நியமிக்கலாம். டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் படித்த சாலை ஆய்வாளர்கள் இரண்டு ஆண்டுகள் குறையாமல் பணியாற்றிருந்தால் அவர்கள் பதவி உயர்வின் அடிப்படையில் இளநிலை வரை தொழில் அலுவலர்களாக நியமிக்கலாம். மேலும், ஒரு வருடம் மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களை நேரடி நியமனத்தின் மூலம் இப்பணியிடங்களுக்கு நியமிக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>