கான்ட்ராக்டர் வீட்டில் கொள்ளை

பொன்னேரி: கான்ட்ராக்டர் வீட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். பொன்னேரி அடுத்த வெண்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர்(47). கான்ட்ராக்டர்.  இவர், குடும்பத்துடன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு சென்னைக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்து பார்த்தபோது 40 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடப்பாரையால் பீரோவை உடைக்க முடியாததால் உள்ளே இருந்த நகைகள் தப்பியது குறிப்பிடத்தக்கது. புகாரின்பேரில் பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரிக்கின்றனர்.

Related Stories:

>