×

11 தலைமை வரை தொழில் அலுவலர் டிரான்ஸ்பர்: உடனே பணியில் சேர பொதுப்பணித்துறை உத்தரவு

சென்னை: தமிழக பொதுப்பணித்துறையில் முதுநிலை வரை தொழில் அலுவலர் (சிறப்பு நிலை வரை தொழில் அலுவலர்) 11 பேர் தலைமை வரை தொழில் அலுவலராக பதவி உயர்வு வழங்கியும், பணியிட மாற்றம் செய்தும் நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சிறப்பு வரை தொழில் அலுவலர் ராஜா பாதர் சென்னை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் அலுவலகம், சிறப்பு வரை தொழில் அலுவலர் லதா சென்னை சுரங்கவியல் மற்றும் கண்காணிப்பு வட்ட அலுவலகம், சிறப்பு நிலை வரை தொழில் அலுவலர் வி.வசந்தி சென்னை மருத்துவ கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம், சிறப்பு வரை தொழில் அலுவலர் ஆர்.வசந்தி சென்னை திட்ட உருவாக்கம் தலைமை பொறியாளர் அலுவலகம், சிறப்பு வரை தொழில் அலுவலர் அமீர் பாட்ஷா பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலக தலைமை வரை தொழில் அலுவலர் என மொத்தம் 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அலுவலர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் இருந்து உரிய விடுவிப்பு பெற்று புதிய பணியிடத்தில் உடனடியாக பணியில் சேருமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். தனியார் விடுப்பில் செல்வதோ அல்லது வேறு பணியிடம் கோரி விண்ணப்பிப்பதோ ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும், பணியமர்வு ஆணை வழங்கப்பட்டு புதிய பணியிடத்தில் பணியில் சேராத அலுவலர்கள் மீது விதிகளின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதன்மை தலைமை பொறியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Occupational Officer Transfer , 11 Chief Graduate Officer Transfer: Public Works Department order to join the service immediately
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...