×

விருத்தாச்சலம் சிறையில் கைதி மரணம் தொடர்பான விசாரணையில் சிபிசிஐடி அதிகாரி மாற்றம்

விருத்தாச்சலம்: விருத்தாச்சலம் சிறையில் விசாரணை கைதி செல்வமுருகன் என்பவருடைய மரணத்தில்  சிபிசிஐடி அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். இந்த வழக்கை இதுவரை காவல் ஆய்வாளர் தீபா என்பவர் விசாரித்து வந்த நிலையில் துணைக்காவல் கண்காணிப்பாளர்   குணவர்மன் என்பவரை விசாரணை அதிகாரியாக  நியமித்திருக்கின்றனர் . உயிரிழந்த செல்வமுருகனின் இல்லத்தில் தற்போது  விசாரணை அதிகாரி குணவர்மன் தனது விசாரணையை தொடங்கியுள்ளார்.அடுத்ததாக நெய்வேலி நகர காவல்நிலையம் மற்றும் கிளை சிறைச்சாலையில் விசாரணை நடத்த திட்டமிட்டுருக்கின்றனர். செல்வமுருகன் இறப்பில் அவரது உறவினரிகள் நிறைய சந்தேகங்களை எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக காவல்துறையிலுள்ள அதிகாரிகள் சித்திரவதை செய்து சிறையில் அடைத்ததனால்தான் அவர் உயிரிழந்துள்ளதாகவும் எனவே இதன்மீது கொலை வழக்கு பதிவுசெய்து  விசாரணை நடத்தவேண்டுமென்று தொடர்ந்து உடலை வாங்க மறுத்துவந்துள்ளனர். இவர் கடந்த 4ஆம் தேதி உயிரிழந்த நிலையில் இன்றுவரை அவரது உடல் பிரேதபரிசோதனை செய்யப்படுவதற்க்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுஉள்ளது.

இந்தநிலையில் வழக்கு விசாரணை கடந்த 6ஆம் தேதி சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு அதற்க்கு விசாரணை அதிகாரியாக கடலூர் மாவட்டத்திலுள்ள சிபிசிஐடி  ஆய்வாளர் தீபா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. அவர்களும் கடந்த 2நாட்களாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இதற்க்கு எதிர்ப்பு கிளம்பியது. அதாவது நெய்வேலி நகர காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர்  மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில்  ஒரு ஆய்வாளரை இன்னொரு ஆய்வாளரே விசாரிப்பதால் முழுமையான தகவல்கள் கிடைக்காது எனவே வேறு உயர் அதிகாரிகளை கொண்டு விசாரிக்கவேண்டும்மென எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தற்போது ஆய்வாளரை மாற்றிவிட்டு சென்னையை சேர்ந்த டிஎஸ்பி
குணவர்மன் தலைமையில் தற்போது விசாரணை தொடங்கியுள்ளது. 


Tags : officer ,CBCID ,death ,investigation ,prisoner ,jail ,Virudhachalam , CBCID officer transferred in connection with the death of a prisoner in Virudhachalam jail
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...