×

சாத்தான்குளம் வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும்: விசாரணையை மாற்றி ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் வழக்கு விசாரணை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும் என விசாரணையை மாற்றில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையானது கடந்த அக்.25-ம் தேதி மதுரை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 போலீசார் ஜாமீன் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்திலும், மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரணை செய்த நீதிபதி பாரதிதாசன், தூத்துக்குடி நீதிமன்றத்தில் சிலரும், மதுரை நீதிமன்றத்தில் சிலரும் மனுத்தாக்கல் செய்துள்ளார்கள். வழக்கை சிபிஐ விசாரணை செய்வதால் எங்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் குழப்பம் உள்ளதாக தெரிவித்து இந்த வழக்கில் சிறப்பு அமர்வுக்கு மாற்றி விசாரணை  நடத்த வேண்டும் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படியில் நீதிபதிகள் சத்தியநாராயணன், பாரதிதாசன் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவுக்கான தீர்ப்பை சிபிஐ மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ளது.

எனவே இந்த வழக்கில் ஜாமீன் மனு வழக்குகள், மற்றும் விசாரணை வழக்குகள் என அனைத்தும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும். இந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரம் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. எனவே விசாரணையும் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : Sathankulam ,High Court ,Madurai District , Satankulam case to be heard in Madurai District High Court: ICC branch order to change the trial
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...