தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு 24 மணி நேரம் மாநகர் பேருந்து சேவை: சென்னை போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.!!!

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்றிட ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் கூடுதல் 310 சிறப்பு  இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநகர் போக்குவரத்துக் கழக வெளியிட்ட  அறிக்கையில், எதிர்வரும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழங்களின் சார்பில் இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் புறப்படும் பின்வரும் 5 பேருந்து நிலையங்களுக்கு பொதுமக்கள்  எளிதாக சென்றிட ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகளை 11.11.2020 முதல் 13.11.2020 ஆகிய 3 நாட்களுக்கு 24 மணி நேரமும்  இயக்கப்படுகின்றன.

வரும் தீபாவளித் திருநாளினை முன்னிட்டு, பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றிட ஏதுவாக, சென்னையிலிருந்து 11.11.2020, 12.11.2020 மற்றும் 13.11.2020 ஆகிய தேதிகளில்  இயக்கப்படும் 9,510 பேருந்துகளில், 11-ம் தேதி 2,225 பேருந்துகளும், 12-ம் தேதி 3,705 பேருந்துகளும், 13-ம் தேதி 3,580 பேருந்துகளும் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. மேலும் பல்வேறு  மாவட்டங்களிலிருந்து 5,247 பேருந்துகள் என ஆக மொத்தம் 14,757 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இத்தீபாவளித் திருநாளினை முன்னிட்டு, சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில் நாளை  11.11.2020 முதல் 13.11.2020 ஆகிய 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் பின்வரும் 5 இடங்களில் இருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. மாதவரம் புறநகர் பேருந்து நிலையம்.

2. தாம்பரம் புதிய பேருந்து நிலையம் mepz மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம்.

3. பூவிருந்தவல்லி பேருந்து நிலையம்.

4. புரட்சிதலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் (கோயம்பேடு)

5. கே.கே.நகர் பேருந்து நிலையம்.

Related Stories:

>