×

தொடர்மழை எதிரொலி: புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் கொட்டுது தண்ணீர்

பட்டிவீரன்பட்டி: தொடர்மழை காரணமாக பெரும்பாறை புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தாண்டிக்குடி அருகே பெரும்பாறை, பில்லாவெளி, மஞ்சள்பரப்பு, கானல்காடு, தடியன்குடிசை, கல்லாங்கிணறு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப்பகுதியில் பல இடங்களில் ஊற்று தண்ணீர் சிறு அருவியாக விழுந்து கொண்டிருக்கிறது. குடகனாற்றில் அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பெரும்பாறை அருகே மஞ்சள்பரப்பு என்ற இடத்திலிருந்து 300 அடி தூரத்தில் உள்ளபுல்லாவெளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த தண்ணீர் திண்டுக்கல்லுக்கு குடிநீர் ஆதாரமான காமராஜர் நீர் தேக்கத்திற்கும், ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள 22 ஊராட்சிகளுக்கும், ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள கண்மாய்களுக்கும் செல்கிறது. இந்த அருவி விழும் பகுதி 300 அடி பள்ளத்தாக்கு நிறைந்த ஆபத்தான பகுதியாகும். அருவியில் குளிக்க தடை உள்ளதால் சுற்றுலா பயணிகளை போலீசார் அனுமதிப்பதில்லை.

Tags : Rain, waterfall, water
× RELATED சென்னை கொரட்டூரில் வளர்ப்பு நாய் கடித்து 12 வயது சிறுவன் பலத்த காயம்