2 நாடுகள்.. 20822 கிமீ ஆன்மீக பயணம்: வேலங்குடி இளைஞர்கள் வேர்ல்ட் ரெக்கார்டு

காரைக்குடி: காரைக்குடி அருகே வேலங்குடியை சேர்ந்த இளைஞர்கள் 20822 கிமீ ஆன்மீக பயணம் மேற்கொண்டு, 8 சாதனை புத்தகங்களில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். காரைக்குடி அருகே கோ.வேலங்குடியை சேர்ந்தவர்கள் பாண்டித்துரை (30). கார்த்திகேயன் (27). சாப்ட்வேர் பொறியாளர்களான இவர்கள் கடந்த 2019 நவம்பர் 7ம் தேதி காரில் தங்களது ஆன்மீக பயணத்தை துவங்கி டிசம்பர் 25ம் தேதி முடித்துள்ளனர். இந்தியா, நோபாள நாடுகளில் 20 மாநிலம், 3 யூனியன் பிரதேசங்களை 49 நாட்களில் 20822 கிமீ பயணம் செய்து 501 கோயில்களுக்கு சென்றுள்ளனர்.

தங்களது பயணத்தை அங்கீகரிக்கும் விதமாக சாதனை புத்தகங்களுக்கு அனுப்பினர். இதில் ஆசியன் புக் ஆப் ரெக்காட், இந்தியா புக் ஆப் ரெக்காட், வேல்ட் ரெக்காட் ஆப் இந்தியா, வஜ்ரா வேல்ட் ரெக்காட், கலாம் வேல்ட் ரெக்காட், அசஸ்ட் வேல்ட் ரெக்காட், பியூச்சர் கலாம் புக் ஆப் ரெக்காட், யூனிவர்சல் அச்சிவ் புக் ஆப் ரெக்காட் என 8 சாதனை புத்தகங்களில் இவர்களது சாதனையை அங்கீகரித்துள்ளனர். இந்த விருதுகள் 2 பேருக்கும் தனித்தனியாக வழங்கப்பட்டுள்ளது.

சாதனை இளைஞர்கள் கூறுகையில், ‘பயணம் என்பது எப்போதும் ஒரு மகிழ்ச்சியான விஷயம். தற்போது உள்ள இளைஞர்கள் அதிகளவில் பயணங்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதனை ஆன்மீகத்துடன் சேர்த்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த புதிய முயற்சியை மேற்கொண்டோம். இதில் வேல்ட் ரெக்காட் ஆப் இந்தியா என்ற சாதனை புத்தகம் பிரதமர் மோடி பராமரிப்பது.

கின்னஸ் சாதனை புத்தகத்திற்கும் அனுப்பி உள்ளோம். தற்போது உள்ள லாக்டவுன் காரணமாக காலதாமதம் ஆகிறது. பெற்றோர், நண்பர்கள், ஊர்மக்கள் ஊக்குவிப்பு காரணமாகவே இந்த சாதனை செய்ய முடிந்தது. வரும்காலங்களில் இதுபோன்று வேறு புதிய உலக சாதனை செய்ய முடிவு செய்துள்ளோம்’ என்றனர்.

Related Stories:

>