×

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் தற்போதைய நிலவரம்: பாஜக கூட்டணி 125 இடங்களில் முன்னிலை; காங்கிரஸ் கூட்டணி 101.!!!

பாட்னா: நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜே.டி.யு+ பாஜக கூட்டணி 125 முன்னிலை பெற்றுள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து  வருகிறது. மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 29ம் தேதி முடிவடைய உள்ளதையொட்டி, மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 38 மாவட்டங்களில் உள்ள 55 மையங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 238 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலவரப்படி, ஜே.டி.யு+ பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

* ஜே.டி.யு+ பாஜக கூட்டணி       -  125 இடங்களில் முன்னிலை.
* ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் கூட்டணி -  101 இடங்களில் முண்னிலை.
* லோக் ஜனதா கட்சி             -  07 இடங்களில் முன்னிலை.
* மற்றவை                       -  10 இடங்களில் முன்னிலை.

ஜே.டி.யு+ பாஜக கூட்டணி

* பாஜக மட்டும்- 71 இடங்களில் முண்னிலை.
* ஐக்கிய ஜனதா தளம் - 48 இடங்களில் முன்னிலை.
* மற்றவை -06 இடங்களில் முன்னிலை.

ஆர்.ஜே.டி+ காங்கிரஸ் கூட்டணி

* ஆர்.ஜே.டி- 67 இடங்களில் முன்னிலை.
* காங்கிரஸ் -21 இடங்களில் முன்னிலை.
* சிபிஐ எம்.எல்- 9 இடங்களில் முன்னிலை.

* மார்க்கிஸ்ட் 02 இடங்களில் முன்னிலை.
* சிபிஐ- 02  இடங்களில் முன்னிலை.
* மற்றவை - 00 இடங்களில் முன்னிலை.

Tags : elections ,alliance ,Bihar Assembly ,BJP ,Congress Alliance , Current status of Bihar Assembly elections: BJP alliance leads in 125 seats; Congress Alliance 101 !!!
× RELATED பாஜவை நம்பி மோசம்போன தமாகா நாடாளுமன்ற...