×

மகளிர் டி20 டிரெய்ல்பிளேசர்ஸ் சாம்பியன்

ஷார்ஜா: மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் இறுதிப் போட்டியில் சூப்பர்நோவாஸ் அணியை 16 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய  டிரெய்ல்பிளேசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஷார்ஜாவில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் முதலில் பந்துவீசியது. டிரெய்ல்பிளேசர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன் குவித்தது. கேப்டன் ஸ்மிரிதி மந்தனா அதிகபட்சமாக 68 ரன் (49 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார்.  சூப்பர்நோவாஸ் பந்துவீச்சில் ராதா யாதவ் 4 ஓவரில் 16 ரன்னுக்கு 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். கடைசி 3 பந்தில் 3 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது.அடுத்து களமிறங்கிய சூப்பர்நோவாஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. அந்த அணியின் கேப்டன் கவுர் அதிகபட்சமாக 30 ரன், சிறிவர்தனே 19 ரன் எடுத்தனர். பந்துவீச்சில் சல்மா கதுன் 3 விக்கெட் வீழ்த்தினார். 16 ரன் வித்தியாசத்தில் வென்ற டிரெய்ல்பிளேசர்ஸ் கோப்பையை முத்தமிட்டது.

Tags : Women ,T20 Trailblazers Champion , Women's T20 Trailblazers Champion
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...