ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் இந்திய டி20 அணியில் இடம் பிடித்தார் நடராஜன்

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணியுடன் டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த வேகப் பந்துவீச்சாளர் டி.நடராஜன் இடம் பிடித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக களமிறங்கிய நடராஜன் அபாரமாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக, அவரது துல்லியமான யார்க்கர் பந்துவீச்சு வியந்து பாராட்டப்படுகிறது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியுடன் வலைப்பயிற்சியில் உதவும் பவுலராக நடராஜன் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், டி20 அணியில் இடம் பெற்றிருந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக விலகியதை அடுத்து அவருக்கு பதிலாக நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆஸி. தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு, இந்திய அணியில் ஒரு நிலையான இடத்தை அவர் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories:

>