×

திருக்கழுக்குன்றத்தில் திமுக சார்பில் ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றிய, நகர திமுக சார்பில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடந்தது. முன்னாள் எம்எல்ஏவும் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளருமான வீ.தமிழ்மணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் ஜி.டி.யுவராஜ் முன்னிலை வகித்தார். முகாமில், 150க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, உறுப்பினர் அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் செல்வக்குமார், செங்குட்டுவன், தினேஷ், இளங்கோ, அழகிரி, சரவணன், மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK , Online membership on behalf of DMK
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி