மத்திய அரசு அலுவலகத்தில் அதிகாரி தற்கொலை

கீழ்ப்பாக்கம்: கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மத்திய அரசுக்கு சொந்தமான நெய்வேலி லிக்ணைட் கார்ப்பரேஷன் அலுவலகம், 9 மாடி கட்டிடத்தில் செயல்படுகிறது. இங்கு, முதன்மை மேலாளராக பணிபுரிந்து வந்த கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ரகு (57), கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ரகு, மதியம் 1 மணியளவில் அலுவலகத்தின் 5வது மாடிக்கு சென்று, அங்கிருந்து திடீரென கீழே குதித்தார். இதில், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த கீழ்ப்பாக்கம் போலீசார், சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>