விவசாயி வீட்டில் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த காய்லர்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம்(55). விவசாயி.  இவரது வீட்டில் நேற்று அதிகாலை 5 பேர் கொண்ட கும்பல் வந்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளே இருந்த ஒரு கிலோ வெள்ளி, 3 சவரன்  நகைகளை கொள்ளையடித்து சென்றனர். மேலும், வீட்டின் வெளியே இருந்த வாகனத்தை திருடிசென்றனர். ஆனால் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வாகனம் டீசல் இல்லாமல் நின்றதால் அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>