×

திருநங்கைகள் போராட்டம்

திருவள்ளூர்: செங்குன்றம் காந்திநகரில் 110க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 7 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை மற்றும் தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தில் வீடுகள் வழங்ககோரி பலமுறை கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து, நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் 40க்கும் மேற்பட்டோர் பாய், படுக்கைகளுடன் வீட்டு சாமான்களுடன் திருநங்கை இன்பா தலைமையில் சாலையில் படுத்து நூதன முறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கு வீட்டுமனை வழங்ககோரி முழக்கங்கள் எழுப்பினர்.

தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவேந்திரன், தேன்மொழி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் வே.முத்துசாமி திருநங்கைகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்களுக்கு இலவச வீட்டுமனை வாங்கி பசுமை வீடு கட்டித் தருமாறு கோரிக்கை வைத்தனர். வரும் டிசம்பர் மாதம் முடிவதற்குள் உங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி பசுமை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். மேலும் வரும் நவம்பர் 23ம் தேதி தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார். இதனைத்தொடர்ந்து திருநங்கைகள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Transgender struggle
× RELATED தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்