முதியவர் பரிதாப பலி

புழல்: செங்குன்றம் அருகே பாடியநல்லூர் எம்.ஏ.கோயில் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ்(69). இவரது மனைவி ராஜேஸ்வரி(62).கடந்த சில ஆண்டுகளாக ராஜேஸ்வரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மாத்திரை சாப்பிட்டு வருகிறார். கடந்த 31ம் தேதி திடீரென பொன்ராஜ் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். இதனையடுத்து, மனைவியின் புற்றுநோய் மாத்திரைகளை தவறுதலாக எடுத்து சாப்பிட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மயங்கி கீழே சரிந்தார். அக்கம் பக்கத்தினர் பொன்ராஜை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு பொன்ராஜ் பரிதாபமாக பலியானார்.

Related Stories:

>