×

புதுவையில் சாலை வரி ரத்து கவர்னர் அறிவிப்பு

புதுச்சேரி: புதுவை கவர்னர் கிரண்பேடி தனது வாட்ஸ் அப்பில் நேற்று வெளியிட்ட பதிவு: கல்வித்துறை உதவி பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க 35 பள்ளிகளுக்கு ரூ.8.45 கோடி வழங்க கவர்னர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. மானியம் வழங்குவதற்கான விதிகளை மறுஆய்வு செய்ய கல்வித்துறை செயலர் தலைமையில் குழுவை உருவாக்கவும்  உத்தரவிடப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களுக்கு சாலை வரியை தள்ளுபடி செய்வதற்கான கோப்புக்கும்  ஒப்புதல் தரப்பட்டுள்ளது.   இதன்படி சரக்கு வாகனங்களுக்கு 2 மாதங்களும்,  பயணிகள் வாகனங்களுக்கு 6 மாதங்களும் சலுகை கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : cancellation ,Governor , Governor announces cancellation of road tax in Puduvai
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...