முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரசில் இணைந்தார்: பாஜ குறித்து பரபரப்பு பேட்டி

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகாந்த் செந்தில். ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர், 2009ம் ஆண்டு கர்நாடக மாநில ஐஏஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றார். கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தார். கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி பதவியில் இருந்து திடீரென விலகினார். இந்நிலையில் நேற்று சசிகாந்த் செந்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தேசிய செயலாளர்கள் சஞ்சய் தத், சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி, எம்பிக்கள் விஷ்ணு பிரசாத், ஜோதிமணி, பொதுச் செயலாளர் கே.சிரஞ்சீவி, ஊடகப்பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் எம்.பி.ரஞ்சன்குமார் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து சசிகாந்த் செந்தில் அளித்த பேட்டி: பாஜவின் அரசியல் கொள்கை என்பது மக்களிடையே வெறுப்பை வளர்ப்பது மட்டும் தான். இந்த கோட்பாடு தமிழகத்திலும் தொடங்கி இருக்கிறது. மக்கள் பணிக்காக காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளேன். மாவட்டம்தோறும் மக்களை சந்தித்து பேசுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>