ஜெ.தீபாவுக்கு கொலை மிரட்டல்: போலீஸ் கமிஷனரிடம் புகார்

சென்னை: போலீஸ் கமிஷனருக்கு ஜெ.தீபா வாட்ஸ் அப் ஆடியோ மூலம் நேற்று அனுப்பிய புகார்: அரசியலில் நான் முழு வீச்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு கூட்டம் சேர்ந்து என்னை ஏமாற்றிக்கொண்டிருந்தது. குறிப்பாக, தனக்கு அறிமுகமே இல்லாத ராஜா மற்றும் ஈசிஆர்.ராமச்சந்திரன் என்ற இருவர் வியாபாரி என்று தங்களை சொல்லிக்கொண்டு என்னுடைய பேரவையில் இருந்து வந்தனர். தனக்கு இவர்களால் ஆபத்து ஏற்பட்ட போது, இவர்கள் மீது பலமுறை நான் புகார் அளித்தும் காவல்துறை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. ஈசிஆர். ராமச்சந்திரன் மற்றும் ராஜா என்ற இந்த இரண்டு பேரும் பலரிடம் பணம் வசூல் செய்து அதை எண்ணிடம் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

எனது உயிருக்கும், உடமைக்கும், எனது கணவருக்கும் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது. வீட்டிற்குள்ளே அத்துமீறி அந்த இரண்டு பேரும் புகுந்து மிரட்டினர். இவர்கள் இருவரும் என்னை பின்தொடர்கிறார்கள். இதனால், நான் அச்சம் அடைந்துள்ளேன். எனது உடல்நிலை தற்போது பாதிப்படைந்துள்ளது. எனக்கு மன உளைச்சலும், ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. எனவே, காவல் ஆணையர் இந்த புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

>