×

கமலா வெற்றிக்கு என் மருமகளுக்கு பங்குண்டு: பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா டுவிட்

மும்பை: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசின் வெற்றிக்கு எனது மருமகளுக்கும் பங்குண்டு என்று பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகரும், பாஜக முன்னாள் எம்பியும், தற்போதைய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சத்ருகன் சின்ஹா, ​​அமெரிக்க துணை அதிபராக தேர்வான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிசுடன், தனது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக டுவிட் செய்துள்ளார். அந்த டுவிட்டரில், கமலா ஹாரிசின் புகைப்படத்துடன் அவரது மருமகள் ப்ரீதா சின்ஹா இருப்பது போன்ற புகைப்படத்தை பதவிட்டுள்ளார். அவரது டுவிட்டில், ‘மனமார்ந்த வாழ்த்துக்கள்! ஜோ பிடனின் அற்புதமான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட வெற்றியை உலகமே கொண்டாடுகிறது. அதேபோல், கமலா ஹாரிசின் வெற்றியும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது’ என்று தெரிவித்துள்ளார்.

அவரது மற்றொரு டுவிட் பதிவில், ‘அவர் (கமலா ஹாரிஸ்) என் மகள் போன்ற மருமகள் ப்ரீதா சின்ஹாவுடன் இங்கே (வெளியிட்ட புகைப்படம்) காணப்படுகிறார். ப்ரீதா சின்ஹா எனது உறவினரான டாக்டர் லகன் சின்ஹாவின் மகள். கமலா ஹாரிசின் வெற்றிக்காக அவரது கட்சியின் இளைஞர் அணியுடன் இணைந்து ப்ரீதா செயல்பட்டார். அமெரிக்க அதிபர் தேர்தலில் எங்களது பிரீத்தியின் பங்கு அதிகமாக இருந்தது. இந்த மகத்தான வெற்றிக்கு பாடுபட்ட ப்ரீதாவுக்கும் வாழ்த்துக்கள்! மிகவும் சந்தோஷம்’ என்று பதிவிட்டுள்ளார். கமலா ஹாரிசின் சாதனைகள் குறித்து சத்ருகன், கங்கனா, கரீனா கபூர் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Tags : daughter-in-law ,Shatrugan Sinha ,Kamala , My daughter-in-law contributes to Kamala's success: Bollywood actor Shatrugan Sinha tweeted
× RELATED எனக்கும், தமிழகத்துக்குமான காதல்...