×

தேனியில் நாட்டுக்கோழி விற்பனை ஜரூர்

தேனி: தேனி மாவட்டத்தில் நெடுஞ்சாலையோரங்களில் நாட்டுக்கோழி விற்பனை ஜரூராக நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலையோரங்களில் உணவகங்கள், டீக்கடைகள், பேக்கரிகள் ஏற்கனவே இயங்கி வருகின்றன. அதன்பின்னர் பழங்கள், கருப்பட்டி, வெள்ளரிக்காய், துணிகள், வாகனங்களின் சீட்கவர், பூண்டு  என நெடுஞ்சாலையோரக்கடைகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. தேனி மாவட்டத்தில் காய்கறிகளை கூட நெடுஞ்சாலயோரங்களில் போட்டு விற்க தொடங்கி உள்ளனர். தேனி மாவட்டத்தில் கிராமங்கள் அதிகம் இருந்தாலும், நாட்டுக்கோழி கிடைப்பது அரிதான விஷயமாக இருந்தது.

இதனால் விவசாயிகள் கோழிகளை வளர்க்க தொடங்கினர். புரோக்கர்கள் இந்த கோழிகளை குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் வாங்கி, அதிக விலைக்கு விற்க தொடங்கினர். இதனால் கோழி வளர்த்தும் விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை. தமிழக அரசு கால்நடைத்துறை மற்றும் விவசாயத்துறை இணைந்து நாட்டுக்கோழி வளர்க்கும் விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளையும் காய்கறிகளையும், தாங்கள் வளர்க்கும் கோழிகளையும் நெடுஞ்சாலையோரங்களில் கடை விரித்து விற்க தொடங்கியுள்ளனர்.

1 கிலோ நாட்டுக்கோழியை ரூ.600 ரூபாய் வரை விற்கின்றனர். நேரடியாக விற்பதால் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. மேலும் பொதுமக்களுக்கும் நாட்டுக்கோழி எளிதில் கிடைக்கிறது. கோழி வாங்க தெருத்தெருவாக அலைய வேண்டிய அவசியம் இல்லாமல் உள்ளது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.



Tags : Turkey ,Theni , Turkey sale in Theni is a must
× RELATED துருக்கியில் உள்ளூர்...