சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கிளை வாய்க்கால் தடுப்பு சுவர்கள் சேதம்: விரைவில் சீரமைக்க வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராம பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கிளை வாய்க்கால் தடுப்பு சுவர்கள் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில நீண்ட நாட்களாக இடிந்தும், சேதமடைந்தும் வருகிறது. மேலும் தடுப்பு கட்டைகள் இல்லாததாலும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். தற்போது விகேடி சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் சேதமான கிளை வாய்க்கால் தடுப்பு சுவர்களை நகாய் திட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளதாக அப்பகுதி வாசிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

கரைமேடு பெரியமதகு மருதூர் செல்லும் கிளை வாய்க் கால் தடுப்பு கட்டைகள் சாலையின் இருபுறமும் இல்லாமல் உள்ளது. அதனையடுத்து கரைமேடு கிராம பகுதியிலிருந்து சேத்தியாத்தோப்பு செல்லும் சாலையில் உள்ள வானம்பாத்தான் வாய்க்கால் அருகே ஒரு தடுப்பு கட்டையும், இல்லாமல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடங்களை நேரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>