திருக்கோவிலூர் அருகே அனுமதியின்றி பாறை உடைத்த விவசாயி மீது வழக்குப்பதிவு: வாகனங்கள் பறிமுதல்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே அனுமதியின்றி பாறை உடைத்த விவசாயி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த திம்மச்சூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இருந்த கருங்கல் பாறைகளை டிரில்லர் டிராக்டர் வண்டி வைத்து உடைத்தும் அதனை சைஸ் வாரியாக பிரித்துதெடுத்தும் விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திம்மச்சூர் விஏஓ ராஜேந்திரன் மற்றும் மீனியல் ஆகிய இருவரும் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அனுமதியின்றி கருங்கல் பாறையை டிரில்லர் டிராக்டர் வைத்து உடைத்தது தெரியவந்தது.

இதனையடுத்து விஏஓ ராஜேந்திரன் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பாலகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதற்கு பயன்படுத்திய டிரில்லர் டிராக்டர், கிரேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>