×

நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா

சென்னை: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சிரஞ்சீவி. கடைசியாக அவர் சைரா நரசிம்ம ரெட்டி என்ற வரலாற்று படத்தில் நடித்திருந்தார். இப்போது ஆச்சார்யா என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இம்மாதம் துவங்க இருந்தது. படப்பிடிப்புக்கு முன்பாக அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இது குறித்து சிரஞ்சீவி வெளியிட்ட அறிக்கையில், ‘ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்புக்கு முன்பாக, படக்குழுவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் எனக்கு பாசிட்டிவ் வந்துள்ளது. இதனால் வீட்டிலேயே நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள், தாங்களும் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது உடல் நிலை தொடர்பாக ரசிகர்களுக்கு தொடர்ந்து தகவல் தெரிவிப்பேன்’என்றார்.

Tags : Corona ,Chiranjeevi , Corona to actor Chiranjeevi
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...