×

பாராட்டு மழையில் சன்ரைசரஸ் ஐதராபாத் வீரர் நடராஜன்: யார்க்கர் நடராஜன் என்று வீரர்கள், ரசிகர்கள் புகழாரம்

ஐதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரில் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்களின் கவனம் ஈர்த்த தமிழக வீரர் நடராஜனுக்கு பாராட்டுகள் குவிகிறது. சன்ரைசரஸ் ஐதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் நடப்பு ஐபிஎல் தொடர் மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளார். 20 ஓவர் போட்டிகளில் யார்க்கர் பந்துகளை வீசுவது கடினமான காரியம். ஆனால் அதனை எளிதாக செய்யும் நடராஜனை யார்க்கர் நடராஜன் என்றே அழைக்கின்றனர். ஒரு ஓவரில் அத்தனை பந்துகளையும் ஏக்கர்களாக வீசும் வல்லமை படைத்தவராக விளங்கும் நடராஜன் சன்ரைசரஸ் வெற்றிகளுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

பெங்களூரு உடனான எலிமினேட்டர் சுற்றில் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ்-ஸை போல்டாக்கி நிலைகுலைய செய்த நடராஜனை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். நடப்பு தொடரில் 16 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன், அதிக யார்க்கர் பந்துகளை வீசிய வீரர் என்ற பெருமையையும் தனதாக்கியுள்ளார். சர்வதேச போட்டிகளில் அனுபவம் இல்லாத யாருமே நடராஜனை போல் துல்லியமாக யார்க்கர் வீசி பார்த்தது இல்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் புகழாரம் சூட்டினார். தகுதி சுற்று ஆட்டத்தில்  டெல்லியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்திய நடராஜனை யுவராஜ் சிங்கும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

நடராஜன் போன்ற திறமையான வீரர் அடையாளம் காணப்பட்டது பெருமையாக உள்ளதாக ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் கூறியுள்ளார். துல்லியமான பந்துவீச்சு திறமையால் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம்பெறுள்ள நடராஜனுக்கு 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.


Tags : Natarajan ,Sunrisers Hyderabad ,Yorker Natarajan ,fans , Sunrisers Hyderabad player Natarajan in the rain of praise: Players and fans praise him as Yorker Natarajan
× RELATED நான் ரெடி தான்… கம்மின்ஸ் உற்சாகம்