×

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸ் புகைப்படங்களை வடித்து மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து..!!

புவனேஸ்வர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு மணற்சிற்பம் வடித்து மணற்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக், மணல் சிற்பம் மூலம் தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். ஒடிசாவில் உள்ள பூரி கடற்கரையில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸின் புகைப்படங்களை சிற்பமாக வடித்துள்ள  சுதர்சன், ஆங்கிலத்தில் Congratulations USA என்ற எழுத்துக்களை பொறித்துள்ளார். மறு சிற்பத்தின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுதர்சன் பட்நாயக், அமெரிக்க தேர்தல் வெற்றியை வரலாற்று வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக்.

இவர் சிறந்த மணல் சிற்ப கலைஞராவார். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல் தெரிவித்து வருபவர். எந்த விஷயமானாலும் அது தொடர்பாக ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பங்களை வரைந்து வருபவர். பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இதற்கிடையே, சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் வெற்றி பெற்று விரைவில் பதவியேற்க உள்ளனர். இந்நிலையில்,மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு மணல் சிற்பம் வரைந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Tags : Sudarshan Patnaik ,victory ,election ,Kamala Harris ,Joe Biden ,US , US Presidential Election, Joe Biden, Kamala, Photography, Sand Sculpture, Sudarshan Patnaik
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...