×

சென்னை - பெங்களூரு இடையே ரூ.17 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 4 வழி விரைவுச்சாலை: பிரதமர் விரைவில் தொடங்கி வைக்கிறார்

டெல்லி: சென்னை - பெங்களூரு இடையேயான அதிவேக சாலை அமைப்பதற்கான தொடக்க பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. சென்னைக்கும், பெங்களூருக்கு இடையே 263 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு  அதிவேக நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணிகள் 95% முடிந்துள்ள நிலையில் முதற்கட்ட பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தப்புள்ளி கோரி இருக்கிறது. இந்த அதிவேக சாலையை வரும் 2024-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்தால் கார் மூலம் பயணிக்கும் ஒருவர் இரண்டரை மணி நேரத்தில் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு சென்றுவிட முடியும். ரூ.17 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ள சென்னை - பெங்களூரு இடையேயான திட்ட பணிகளை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.


Tags : Chennai ,expressway ,Bangalore , Chennai-Bangalore Rs 17,000 crore 4-way expressway: PM to launch soon
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை