×

பாம்பனில் சூறைக்காற்றுடன் கடும் கடல் சீற்றம்: புதிய இரயில் பாலம் கட்டும் பணிகளுக்கு நிறுத்தப்பட்டிருக்கும் இயந்திரங்களால் அபாயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் கடலில் கடல் சீற்றம் உருவாக்கியுள்ளது. இதனால் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பலத்த காற்றுடன் கடலலைகள் சீறிப்பாய்ந்தன.  புதிய ரயில் பாலம் கட்டுமான பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த மிதவைகள், கிரேன் மற்றும் ஆள்துளையிடும் இயந்திரங்கள் கடல் அலையில் சிக்கி கிடக்கிறது. தொடர்ந்து கடலில் காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றம் ஏற்படுவதால் புதிய ரயில் பாலம் கட்டுமான பணிக்காக நிறுத்தப்பட்டிருக்கும் இயந்திரங்கள் பழைய இரயில் பாலத்தில் மோதி சேதம் ஏற்பட்டத்தும் அபாயம் நிலையுள்ளது.

இதனால் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஆர்.வி.என்.எல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இயந்திரங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொன்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தற்போது  ஊழியர்கள் அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Pamplona , Storm in Pamplona, sea rage, railway bridge, by machinery, danger
× RELATED ஸ்பெயினில் பாரம்பரிய சான் ஃபெர்மின் திருவிழா தொடக்கம்..!!