பயணச்சீட்டு இன்றி மாநகர் பேருந்துகளில் பயணம்: கடந்த 2 மாதத்தில் ரூ.5,52,050 வசூல்...சென்னை போக்குவரத்துக்கழகம் தகவல்

சென்னை: மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணச் சீட்டு இன்றி பயணம் செய்த 4,644 பயணிகளிடம் ரூ.5,52,050 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மேலான் இயக்குநர் தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக மேலான் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில், மாநகர் போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில், உரிய பயண அட்டை இல்லாமல் பயணம் செய்வது மோட்டார் வகனச் சட்டத்தின்படி தண்டணனக்குறிய குறிய குற்றமாகும். இதனால், மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.

இதனை வலியுறுத்தி பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்குமாறு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும்,பயணிகளிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்திட நாள்தோறும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்மாநகர் போக்குவரத்துக் கழகப் பயணச்சீட்டு பரிசோதகர்களைக் கொண்டு மேற்கொள்ளபட்டு வரும் சிறப்புப் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு, இப்பரிசோதனையின் போது பயணச்சீட்டு இன்றி பயணிப்போரிடம் அபராதத்தெகை அதிகப்பட்சமாக ரூ.500/- வசூலிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தோர் கடந்த செப்டம்பர் 2020 மாதத்தில் 1,522 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.1,97,550/-ம் மற்றும் அக்டோபர் 2020 மாதத்தில் 3,122 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.3,54,500/-ம் ஆக  மொத்தம் 4,644 நபர்களிடம் அபராதத் தொகையாக ரூ.5,52,050/- வசூலிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களிலும் இந்நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>