×

ஆக்ஸ்போர்டு பல்கலை. உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை தொடங்கியது ஆஸ்திரேலியா.!!!

கான்பெரா: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 85,07,754 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடங்கி இந்த 8 மாதங்களில் இந்த நோயில் இருந்து 78 லட்சத்திற்கும் அதிகமான பேர் குணமடைந்து உள்ளனர். மேலும்  குணமடைந்தோர் விதிகம் 92.49 சதவீதத்தைத் தொட்டு உள்ளது, இதனால் இறப்பு வீதமும் குறைந்து 1.48 சதவீதமாக உள்ளது.

இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்தும் விதமாக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி சோதனை செய்து வருகிறது. இங்கிலாந்து அரசு மற்றும் மருந்து நிறுவனமான  அஸ்ட்ராஜெனேகா உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, மிகவும் நம்பிக்கை அளிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதல்கட்ட சோதனை வெற்றி  பெற்றுள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தியை ஆஸ்திரேலியா தொடங்கியது. இந்த தடுப்பூசிகள் உலகளவில் மிகவும் நம்பிக்கைக்குரிய தடுப்பூசியாக கருதப்படுகிறது. தடுப்பூசிக்கு ஒரு நபரின் இரண்டு டோஸ் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நம்பிக்கைக்குரிய பரிசோதனை கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகள் வெற்றிபெற்றால், இந்த ஆண்டு இறுதிக்குள் முதன் முதலாக இந்தியர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பு  உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் தற்போது 3 கொரோனா தடுப்பூசிகள் முன்னணி சோதனைகளில் உள்ளன, அவை மருத்துவ பரிசோதனையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. ஆக்ஸ்போர்டின் கொரோனா தடுப்பூசி உள்நாட்டில் உருவாக்கப்பட்ட மற்ற 2 தடுப்பூசிகளை விட முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : University of Oxford ,Australia , University of Oxford. Australia begins production of corona vaccine
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது