மெஸ்ஸி அசத்தலில் பார்சிலோனா வெற்றி

ஸ்பெயினில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் லீக் ஆட்டத்தில் ரியல் பெட்டிஸ் அணியுடன் நேற்று மோதிய பார்சிலோனா அணி 5-2 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லியோனால் மெஸ்ஸி 2வது பாதியில் மாற்று வீரராகக் களமிறங்கி 2 கோல் அடித்து அசத்தினார் (61வது மற்றும் 82வது நிமிடம்). டெம்பெல், கிரீஸ்மேன், கோன்சாலஸ் தலா ஒரு கோல் போட்டனர். ரியல் பெட்டிஸ் சார்பில் சனாப்ரியா, மோரன் கோல் அடித்தனர். பார்சிலோனா அணி 7 லீக் ஆட்டத்தில் 3 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியுடன் 11 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் பின்தங்கியுள்ளது.

Related Stories:

>