தொடர் குற்றங்களில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் வள்ளுவர்புரம் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் தீபன் என்கிற தீபன் சக்கரவர்த்தி (31) இவரும், இவரது அண்ணன் தினகரனும் கடந்த ஐந்து வருடங்களாக அந்தப் பகுதியில் பல்வேறு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையொட்டி இவர்கள் மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில்  தீபன் சக்கரவர்த்தி வெள்ளூர்புரத்தைச் சேர்ந்த ராமதாஸ் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 500 வழிப்பறி செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து தீபன் சக்கரவர்த்தி பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்ததாலும், இவர் மீது காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு உள்ளதாலும் ஒருவருடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட எஸ்பி அரவிந்தன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக்கொண்டு  கலெக்டர் பா.பொன்னையா அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் தீபன் சக்கரவர்த்தி புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>