×

சூதாடி பெரிய இடத்துக்கு போவேன் என்றவர் உலகத்தை விட்டே போய்விட்டார்: பாலன், மதன்குமார் மைத்துனர்-தனியார் வங்கி ஊழியர், கோவை

மதன்குமார் வேலையில் கவனமாக இருந்தார். இவருக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக ஈடுபாடு இருப்பது எங்களுக்கு தெரியவில்லை. சம்பாதித்த பணத்தை எல்லாம் சூதாட்டத்தில் இழந்து வந்தார். நாங்கள் மதன்குமாருக்கு திருமணத்துக்காக பெண்ணை தேடி வந்தோம். கடந்த 3 மாதத்துக்கு முன்பு, பெண் பார்த்து உறுதி செய்து விட்டோம். அடுத்த முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாம் என முடிவு செய்து வைத்திருந்தோம். கொரோனா பரவியதால் கெடுபிடி இருந்தது. எளிய முறையில் திருமணம் செய்யலாம் என திட்டமிட்டிருந்தோம். மதன்குமார் முதலில் மறுத்தாலும், பின்னர் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். ஆனால், மணப்பெண் வீட்டாரிடம் அதிகம் பேசவில்லை.

ஆன்லைன் சூதாட்டத்தில் தீவிரமாக இருந்தார். ஏன் இப்படி சூதாட்டத்தில் இருக்கிறாய், அதை விட்டு விடு... என பல முறை சொல்லிப்பார்த்தோம். ஆனால், அவர் கேட்கவில்லை. வீட்டிற்குள் சென்று தனது அறை கதவை மூடிக்கொண்டு சூதாட்டத்தில் எப்போதும் ஈடுபட்டிருப்பார். நாங்கள் கேட்டால், ‘‘இப்போ பணம் போனா என்ன, நல்லா கேம் ஆடுனா விட்ட காசு திரும்ப வந்துடும்... கொஞ்ச நாள்ல பாருங்க, நான் கோடீஸ்வரனா மாறிவிடுவேன்.... என்பார். இனி, நான் இந்த ஏரியாவுல இருக்கமாட்டேன். டெல்லி, பெங்களூர், மும்பையில நிறைய பேரு இதுல டாப்ல இருக்காங்க... கொஞ்ச நாள் பிரச்னை வரும்.

அப்புறம் அதை சமாளிச்சு கேம் ஆடி, பெரிய லெவல்ல போவேன்’’ என அடிக்கடி கூறுவார். ஆனால், இந்த உலகத்தை விட்டே போய்விட்டார். இதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. சூதாட்டத்தில இதுவரைக்கு யாரும் ஜெயிச்சு பணக்காரங்க ஆனதில்லை. அது எல்லாம் ஏமாத்துற வித்தைன்னு, நாங்க பல தடவை சொன்னோம். திருமணம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தோம். ஆனால், விட்ட பணத்தை பிடிக்க முடியாமல் மன விரக்தி அடைந்தார். திருமணம் செய்தால், சூதாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட முடியுமா என்ற பதட்டமும் அவருக்கு இருந்திருக்கலாம். யாரிடமும் பேசாமல் சில நாட்கள் இருந்தார்.

திடீரென அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்துக்கு இவரை போல் பலரும் அடிமையாக இருக்கிறார்கள். இவர்களை குடும்பத்தினர்தான் தேடி கண்டுபிடித்து மீட்கவேண்டும். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் விளம்பரம் வருகிறது. சினிமா நடிகர், கிரிக்கெட் வீரர்கள் சொல்வதை கேட்டு, சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அரசாங்கம் இதை தடை செய்யவேண்டும். இதுபோன்ற வெப்சைட்கள் நிறைய இருக்கிறது. அரசு தடுக்காமல் விட்டால், மேலும் பலர் தற்கொலை செய்வார்கள்.

ஏழை-ஏளிய மக்கள் குறிப்பாக, இளைஞர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் தங்களது சம்பாத்தியத்தை இழந்து வீணாகி விடுவார்கள். சூதாட்ட நிறுவனங்களுக்கு இதில் பெரும் லாபம் கிடைக்கிறது. அதனால்தான், இந்த விளையாட்டை தடை செய்யாமல் இருக்கிறார்கள். எனவே, ரம்மி உள்பட அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்யவேண்டும். இந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். வீட்டிற்குள் சென்று தனது அறை கதவை மூடிக்கொண்டு சூதாட்டத்தில் எப்போதும் ஈடுபட்டிருப்பார். நாங்கள் கேட்டால், இப்போ பணம் போனா என்ன, நல்லா கேம் ஆடுனா விட்ட காசு திரும்ப வந்துடும்... கொஞ்ச நாள்ல பாருங்க, நான் கோடீஸ்வரனா மாறிவிடுவேன்... என்பார்.


Tags : gambler ,Balan ,world ,Madankumar ,Coimbatore , The gambler who said he would go to the big place has left the world: Balan, Madankumar's brother-in-law-private bank employee, Coimbatore
× RELATED 22 வருடத்தில் 7 படம் மட்டும் இயக்கியது ஏன்? வசந்த பாலன் பதில்