முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் காங்கிரஸில் இன்று இணைகிறார்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் இன்று காலை 10.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர், ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி ஆர்.மனோகரன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.என்.முருகானந்தம் ஆகியோர் செய்கிறார்கள். தொடர்ந்து 12.30 மணியளவில், கர்நாடக மாநிலத்தில் மாவட்ட ஆட்சித்தலைவராக சிறப்பாக துணிச்சல் மிக்க வகையில் பணியாற்றி, பாராட்டுக்களை பெற்று, அப்பொறுப்பிலிருந்து விலகிய சசிகாந்த் செந்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், டாக்டர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்.

Related Stories:

>