×

மாஸ்க் அணிவதில் அலட்சியம் சென்னையில் அபராதம் விதிப்பதை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு செயலாளர் அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை தீவிரமாக கடைபிடிக்க என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றுவதற்கு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர். இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் வசூலிக்கும் நடைமுறை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாக துறை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வழங்கிய அறிவுறுத்தலில், கடந்த சில நாட்களாக கொரோனா விதிகளை மீறியவர்களிடம் இருந்து தினசரி வசூலிக்கப்படும் அபராதம் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.1 லட்சமாக குறைந்துள்ளது. எனவே அனைத்து வட்டார துணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது. தற்போதுவரை சென்னையில் ரூ.3 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai , Neglect in wearing the mask should be strictly adhered to in Chennai: Secretary instructs officers
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...