நாளை தியேட்டர்கள் திறப்பு பழைய படங்களுக்கு டிக்கெட் புக்கிங்

சென்னை: கொரோனா லாக்டவுன் காரணமாக தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த சினிமா தியேட்டர்கள், தமிழக அரசு அனுமதியுடன் நாளை திறக்கப்படுகிறது. இந்நிலையில், தியேட்டரில் படம் ஒளிபரப்புவதற்கான விபிஎப் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் கூறினர். இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில், நாளை தமிழகம் முழுவதும் உள்ள 1,050 தியேட்டர்களை திறக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். புதிய படங்கள் திரையிடுவது உறுதி செய்யப்படாததால், லாக்டவுனுக்கு முன் வெளியான ‘’தாராள பிரபு’’, ‘’ஓ மை கடவுளே’’, ‘’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’’ ஆகிய  படங்களை மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர். அதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது.

Related Stories:

>