யோகா பயிற்சியில் எஸ்ஐ மகன் உலக சாதனை

திருப்போரூர்: மதுராந்தகம் கிளைச் சிறையில் எஸ்ஐயாக பணிபுரிபவர் பழனி. இவரது மகன் தினேஷ் (11). மாம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறார். சிறுவயதில் முதல் தினேஷ், யோகா கலையை கற்கிறார். இதில் துவிபாட சிரசாசனம் என்ற தலைப்பில் உலக சாதனை நிகழ்ச்சி நேற்று மேலக்கோட்டையூரில் உள்ள காவலர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நடந்தது. யோகா ஆசிரியர் காமாட்சி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தினேஷ், தனது உடலை வில்லாக வளைத்து, இரு கால்களையும் தூக்கி கழுத்தின் பின்புறத்தில் வைத்து கொண்டு இரு கைகளையும் முன்புறம் நோக்கி கும்பிட்டபடி அசையாமல் 15 நிமிடம் நிற்கும் துவிபாட சிரசாசனத்தை செய்து, உலக சாதனை படைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக புழல் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு சிறுவனை வாழ்த்தி நோபல் கின்னஸ் சாதனை விருதை வழங்கினார். இதில், மாம்பாக்கம் எஸ்பிஓஏ பள்ளி தாளாளர் முரளிதரன், பள்ளி முதல்வர் விஜயலட்சுமி நாகேஸ்வரன், யோகா பயிற்சி மைய நிர்வாகிகள் அரவிந்த் திருஞானராமன் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Related Stories:

>