×

சிறுமலை வனப்பகுதியில் சிறுமலை வனப்பகுதியில் 4 நாட்டு துப்பாக்கிகள் சிக்கின

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அருகே தென்மலை வனப்பகுதியில் கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர். இதனை வீசியவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானோர் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும், துப்பாக்கிகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ரவளிபிரியா எச்சரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் சிறுமலை அருகே தென்மலை வனப்பகுதியில் நேற்று 4 நாட்டு துப்பாக்கிகள் கிடந்தன. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் தெய்வம், எஸ்ஐ அழகுபாண்டி, வனச்சரகர் மனோஜ் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று 4 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 2 துப்பாக்கி குழல்களை கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, துப்பாக்கிகளை வீசி சென்ற மர்மநபர்கள் யார், இவர்களுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த அக்.13ம் தேதி இதே போல் வனப்பகுதியில் 28 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Country ,forest ,Sirumalai , 4 Country guns were found in the Sirumalai forest
× RELATED உறுப்பு தானம், திசு மாற்று அறுவை...