×

பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானியின் 93-வது பிறந்தநாள்: அத்வானியுடன் கேக் வெட்டி பிரதமர் மோடி கொண்டாட்டம்.!!!

டெல்லி: அத்வானியின் பிறந்த நாளை கேக் வெட்டி பிரதமர் மோடி கொண்டாடினார். பாஜக மூத்த தலைவர் லால் கிருஷ்ண அத்வானி இன்று தனது 93-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அத்வானி பிறந்தநாளை பாஜகவினர் நாடு முழுவதும்  கொண்டாடி வருகின்றனர். அத்வானிக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அத்வானிக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தில் உள்துறை அமைச்சரும் துணை பிரதமராக இருந்த அத்வானி, நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க  பங்களிப்பை வழங்கினார். மேலும் கட்சியை மக்களிடம் கொண்டு சென்றார். கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் அத்வானி வாழும் உத்வேகமாக இருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ  வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்’ என்று பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து, டெல்லியில் உள்ள அத்வானியின் வீட்டுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். வீட்டிற்கு சென்ற பிரதமர் மோடியை அத்வானி வாசலுக்கு வந்து வரவேற்று அழைத்துச் சென்றார். அத்வானிக்கு பிரதமர் மோடி  மலர்க்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, அத்வானியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.

அதன்பின்னர் அத்வானியுடன் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோர் சிறிது நேரம் உரையாடினர். தொடர்ந்து, எல்.கே அத்வானியுடன் அவரது 93-வது பிறந்தநாளை கேக் வெட்டி  பிரதமர் மோடி கொண்டாடினார். கேக்கை வெட்டி பிரதமர் மோடி மற்றும் அத்வானி பரிமாறி கொண்டனர்.


Tags : LK Advani ,BJP ,Modi ,birthday , BJP senior leader LK Advani's 93rd birthday: Prime Minister Modi celebrates by cutting a cake with Advani !!!
× RELATED குஜராத் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா வேட்பு மனு தாக்கல்