கோவை: கோவை ராமநாதபுரம் அருகேயுள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (48). ஆன்லைன் பங்கு சந்தை முதலீட்டாளர். கடந்த 15 ஆண்டிற்கு மேலாக பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்து வருகிறார். இவரது மனைவி அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். ஆன்லைன் ஷேர் வர்த்தகத் தில் தனபாலுக்கு 20 லட்ச ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்தநிலையில், நேற்று காலை இவர் தனது வீட்டில், ‘‘எனக்கு வாழ விருப்பமில்லை. நான் போகிறேன். என்னை யாரும் தேடவேண்டாம்’’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார். மதியம் அவினாசி ரோடு அண்ணாசிலை அருகே உள்ள பங்கு சந்தை நிறுவனத்திற்கு முன் ரோட்டோரத்தில் ெமாபட்டை நிறுத்திவிட்டு நின்றார். பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோல் எடுத்து தலையில் ஊற்றி தீக்குளித்தார். கொழுந்து விட்டு எரிந்த நெருப்புடன் அவர் அலறினார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர் பரிதாபமாக இறந்தார்.