×

நேரக்கட்டுப்பாடு மீறி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை: போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தி.நகர் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று ஆய்வு செய்தார்.   பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  தி.நகரில் ஏற்கனவே 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூடுதலாக 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 டிரோன் கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும்  கண்காணிக்கப்படுகிறது.

சிசிடிவி காட்சிகளை நேரடியாக கண்காணிக்க தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்பதால் கூடுதலாக 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  தீபாவளி பண்டிகையின்போது காலை 1 மணி  நேரமும், மாலை 1 மணி நேரம் வெடிப்பதற்கு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்றுள்ளது. நேரக்கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Police Commissioner , Strict action if firecrackers explode beyond the time limit: Police Commissioner warns
× RELATED கஞ்சா விற்ற 40 பேர் கைது