×

முன்னாள் பிரதமரை படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது: கே.எஸ்.அழகிரி பரபரப்பு அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர்களை விடுவித்தால் சிறைச் சாலைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அனைத்து தமிழ் கொலை  குற்றவாளிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழும். 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக் கொள்வோம். ஆனால், அரசியல் கட்சியினர் அவர்களுக்கு விடுதலை கோருவது ஏற்புடையது அல்ல. கொலை  குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்று தான் கருத வேண்டும். அவர்களை தமிழர்கள் என்று அழைப்பது சரியல்ல.

அப்துல் கலாம், காமராஜர், அண்ணா, கலைஞர், தோழர் ஜீவானந்தம், கணிதமேதை ராமானுஜம் போன்றவர்களை தமிழர்கள் என்று அழைப்பது பெருமைக்குரியது. கொலை குற்றவாளிகளை விடுவிக்க வேண்டும் என்று ஒரு இயக்கம்  ஆரம்பித்தால் காவல் நிலையங்கள் வேண்டாம், நீதிமன்றங்கள் வேண்டாம், சட்டம் ஒழுங்கைப் பற்றி பேச வேண்டாம் என்பது பொருளாகும். எனவே, முன்னாள் பிரதமரை படுகொலை செய்து, இந்தியாவிற்கு கேடு விளைவித்த   குற்றவாளிகளுக்கு பரிந்து பேசுவது தமிழர் பண்பாடு ஆகாது.



Tags : KS Alagiri ,perpetrators ,assassination ,Tamil , It will not be Tamil culture to speak on behalf of the perpetrators of the assassination of the former Prime Minister: KS Alagiri
× RELATED தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு...