×

தேர்தல் அறிக்கை குழு 2ம் கட்ட சுற்றுப்பயணம்: திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு

சென்னை: திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: 2021ல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலையொட்டி திமுக  தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு  தலைமையிலான குழுவினரிடம் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய பொது அம்சங்கள் மற்றும் தங்கள் மாவட்டத்தில் உள்ள பொதுப் பிரச்னைகள் குறித்த சாரம்சங்களை நேரில்  தெரிவிக்கலாம். திமுக நிர்வாகிகள், திமுக தோழர்கள்  மற்றும் பொதுமக்கள் நவம்பர் 18 காலை-விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய, கள்ளக்குறிச்சி வடக்கு கள்ளக்குறிச்சி தெற்கு, மாலை-திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு. 19ம் தேதி காலை- வேலூர் கிழக்கு, வேலூர் மத்திய,  வேலூர் மேற்கு, மாலை- காஞ்சிபுரம் வடக்கு காஞ்சிபுரம் தெற்கு. 20ம் தேதி காலை-திருவள்ளூர் வடக்கு, திருவள்ளூர் மாவட்டத்திலும் தங்கள் கோரிக்கைகளை குழுவிடம் அளித்திடலாம். 


Tags : Election Reporting Committee ,Phase 2 Tour ,DMK Leadership Announcement , Election Reporting Committee Phase 2 Tour: DMK Leadership Announcement
× RELATED பாஜக தேர்தல் அறிக்கைக் குழு...