ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள பட்டாசு தடையை உடனே விலக்க வேண்டும்: மத்திய அமைச்சர்களுக்கு டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை: “ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ள பட்டாசு தடையை  உடனே விலக்க வேண்டும்” என்று மத்திய அமைச்சர்களுக்கு டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும், திமுக பொருளாளருமான  டி.ஆர்.பாலு எம்.பி. மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார், மத்திய சுற்றுச்சூழல் வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராஜஸ்தான் மாநிலமும் அதனை தொடர்ந்து பல மாநிலங்களும் தீபாவளி பண்டிகை நெருங்கும் நேரத்தில் பட்டாசு வெடிக்க திடீர் தடை விதித்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது.தீபாவளி நாளில் இரண்டு மணிநேரத்திற்கு பட்டாசுகள் வெடிக்கலாம் என்ற நேர அளவையும் விதித்து உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.ேமலும் பட்டாசுகள் தயாரிப்பு முறையோ வெடிகள் வெடிப்பதோ சுற்றுச்சூழல் மீது எவ்வித மோசமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. கோவிட்- 19 தொற்று நோயாளிகளுக்கு பட்டாசு வெடிப்பதால் பாதிப்பு ஏற்படும் என இதுவரை எந்த ஆய்வும் உறுதியாக தெரிவிக்கவில்லை.

இந்த உண்மைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் பல்வேறு மாநில அரசுகள் தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பட்டாசு வெடிப்பதற்குத் தடை விதித்திருப்பது தமிழகத்தை சேர்ந்த 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பேராபத்தில் உள்ளது. தமிழகத்தில் அமைந்துள்ள பட்டாசு தொழிலின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த மோசமான நிலைமையை அகற்றவும் பல்வேறு மாநிலங்கள் விதித்துள்ள தடையை நீக்கவும் தாங்கள் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என்று வேண்டுகிறேன்.

இந்த விஷயத்தில் ஒருவேளை மாநிலங்கள் தடையை நீக்க தயங்கினால் பட்டாசு தொழில் அதிபர்களும் லட்சகணக்கான தொழிலாளர்களும் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். எனவே, இந்த அல்லல்களை கருத்தில் கொண்டு தொழிலார்களுக்கும் பட்டாசு தொழில் உரிமையாளர்களுக்கும் உரிய இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும். தீபாவளி போன்ற பெரும்பான்மை மக்கள் கொண்டாடும் பண்டிகை காலத்தில் இத்தகைய திடீர் தடையினால் ஏற்படும் இழப்பிலிருந்து தொழிலாளர்களை பாதுகாப்பது மத்திய அரசின் கடமை என்பதையும் தாங்கள் ஏற்பீர்கள். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>