மின்சாரம் தாக்கி மாடுகள் பலி

தேவாரம்: தேனி மாவட்டம், கோம்பையில் உள்ள திருவிக தெருவை சேர்ந்தவர் சின்னு. நேற்று இவருக்கு சொந்தமான மாடுகளை அருகில் உள்ள 18ம் கால்வாய் பகுதிக்கு அழைத்து சென்றார். நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழைக்கு, அப்பகுதியில் இருந்த மின் கம்பிகள் அறுந்து கிடந்தது. அந்த வழியாக சென்ற மாடுகள், தரையில் கிடந்த மின்கம்பிகளை மிதித்தன. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு மாடுகளும் துடிதுடித்து இறந்தன. இது குறித்து உடனடியாக மின்வாரியத்திற்கு அப்பகுதிமக்கள் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டது.

Related Stories:

>