×

தமிழகத்தில் இன்று மேலும் 2,341 பேருக்கு கொரோனா; 2,352 பேர் டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 2,341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,41,488ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு  அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

* தமிழகத்தில் மேலும் 2,341 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 7,41,488ஆக அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 7,11,198 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 2,352 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 11,324ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 603 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 2,04,258 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 1,02,11,706 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 80,112 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* தமிழகத்தில் மொத்தம் 205 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 18,966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 4,47,683 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 1,456 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,93,772 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 885 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 33 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை.

Tags : Corona ,Tamil Nadu ,Health Department , Tamil Nadu, Corona, Health Department
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...