பா.ஜ.க-வால் தான் சிறுபான்மை ஓட்டுக்களை இழந்தோம்: அமைச்சர் நீலோபர் கபில் குற்றச்சாட்டு

வேலூர்:  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் அதிமுக இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் நீலோபர் கபில் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜவுடன் கூட்டணி வைத்ததால் தான் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் குறைந்தளவில் பெற்றோம். மக்களின் நலனுக்காக எப்போதும் அதிமுக அரசு செயல்படுகிறது.

அதனால் தான் வாணியம்பாடி தொகுதியில் குடிசை மாற்று வாரிய திட்டத்தின்கீழ் 520 குடியிருப்புகள் கட்டி முடியும் நிலையில் உள்ளது. திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாணியம்பாடியில் அமைக்கப்பட உள்ளது. தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோல், பல்வேறு திட்டங்கள் வாணியம்பாடி மக்களின் நலனுக்காக செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories:

>