×

கொரோனாவுக்கு உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரியூட்டும் இலங்கை அரசை கண்டித்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயற்சி

சென்னை: இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் மத வழக்கத்திற்கு எதிராக எரியூட்டும் இலங்கை அரசை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் அருகே நேற்று போராட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், மாவட்ட தலைவர்கள் ஜுனைத் அன்சாரி, ரஷீத், சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் இலங்கை அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தொடர்ந்து அவர்கள் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அந்த இடத்தில் சிறிறு நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் கூறுகையில், “தவறான உயிரியல் காரணங்களை முன்வைத்து, இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் உடல்களை எரியூட்டுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உடல் அடக்கம் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் அனைத்து மத உரிமைகளும் பாதுகாக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.


Tags : Sri Lankan ,government ,embassy ,Corona ,Muslims , Corona, Muslim, Body, Sri Lanka, Embassy
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!