×

ஆங்கில கடிதத்துக்கு இந்தியில் பதில் - வீரமணி கண்டனம்

சென்னை: ஆர்.டி.ஐ ஆங்கில கடிதத்துக்கு மத்திய அரசு இந்தியில் பதில் அளித்துள்ளதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய சுகாதாரத்துறைக்கு ஆங்கிலத்தில் அனுப்பிய கடிதத்துக்கு இந்தியில் பதில் என வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். மத்திய பாஜக ஆட்சி, துணை போகும் சக்திகள் மீது தமிழக மக்கள் திருப்தியின் உச்சத்தில் உள்ளனர். ஒருவர் ஆங்கிலத்தில் எழுப்பிய கேள்விக்கு ஆங்கிலத்தில் தானே பதில் தந்திருக்க வேண்டும் என கி.வீரமணி வினவியுள்ளார். இந்தி திணிப்பு வெறும் மொழி திணிப்பு மட்டுமல்ல, பண்பாட்டு கலாச்சார திணிப்பும் ஆகும் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Tags : Veeramani , Veeramani, condemnation
× RELATED திமுக, காங்., தேர்தல் அறிக்கைகள் தான் இந்தியாவுக்கே கலங்கரை விளக்கம்